Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

ஜனாதிபதியின் ஆட்டம் விரைவில் அடங்கும் ஜனநாயகமே வெல்லும் ; ரணில் உறுதி !!

Currently online
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் நேற்று(05) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது மைத்திரியின் சர்வாதிகார ஆட்டம் விரைவில் அடங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு தொடர்ந்தும் கூறியதாவது ;
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டார்.

அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும் நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள். இறுதியில் ஜனநாயகமே வெல்லும். சர்வாதிகாரம் பொசுங்கிப் போகும். ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதி.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும் பிரதமர் பதவியை எனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார்.

என்னால் நாடு சீரழிந்தது என்று வாய்கூசாமல் ஜனாதிபதி கூறுகின்றார். உண்மையில் யாரால் நாடு சீரழிந்து போகின்றது என்பது பாமர மக்களுக்குக்கூடத் தெரியும். என்னை விமர்சிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவோம். நாட்டை முன்னேற்றுவோம். மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.