Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

எரிபொருட்களின் கூடுதல் வரியை ரத்து செய்தது பிரான்ஸ் !!

Currently online
பிரான்ஸ் நாட்டில் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்குப் பணிந்து எரிபொருள் விலை உயர்வை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனையடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட 1600 இடங்களில் மஞ்சள் நிற உடை அணிந்த போராட்டக்காரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. அதனை தடுக்கச் சென்ற பொலிசாரின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். 

மேலும் காவலர்களிடம் இருந்து கண்ணீர் புகைக்குண்டுகளை பிடுங்கி அவர்கள் மீதே வீசியெறிந்து போராட்டக்காரர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 

3 வாரங்களாக தொடர்ந்து நடந்து வந்த இந்த போராட்டத்தால் பிரான்ஸ் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதன் காரணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பிரதமர் எட்வர்ட் பிலிப், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். 

அதனையடுத்து பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் எட்வர்ட் பிலிப் நேற்று அறிவித்தார். 

இந்த அறிவிப்பினால் பிரான்ஸ் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.