Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

நான் ஒரு முட்டாள்............!!!!! சுஜா தவம்

Currently online
வயது கடந்து கொண்டே போகிறது.
அப்படியே இருக்கின்றேன்.
நான் என்ன சாதித்து விட்டேன்
எதையாவது சாதிக்க 
முயற்சி செய்தேனா?
சாதிக்க வேண்டும் என்பதையே 
நினைத்து கொண்டு 
முயற்சிகள் இன்றி கிடக்கிறேனே!

அந்தோ தெரிகிறது சூரியன்.
இன்றும் வந்து விட்டது.
ஒரு திரையால் மறைத்து 
ஒழித்து விடவா?
அந்த சூரியக்கதிரை 
மறைத்து விட்டால் சில நேரம் 
இந்த கடிகாரம் முள் 
செயலிழந்து விடும்.
காலம் இருக்கிறது எனக்கு.

இங்கே பார் மேகம் கறுத்து 
மழை அடித்து பொலிகிறது.
சூரியனை காணவில்லை
ஓகோ கடிகாரம் நின்றிருக்க கூடும்.
காலம் இருக்கிறது எனக்கு.

தெரிகிறது நிலா!
என்ன ஆச்சரியம் சூரியனை 
இதுவரை காணவில்லையே. 
எப்படி நிலா வந்தது?
கவனிக்க மறந்து விட்டேன்
கடிகாரம் முட்கள் ஓடி
கொண்டு தான் இருக்கிறது.

சற்று பொறுங்கள் 
இந்த முட்களை இயக்கும் 
பற்றரியையே கழட்டி விடுகிறேன்.
ஆகா சுற்றுவது நின்று விட்டது.
காலம் இருக்கிறது எனக்கு.
என்ன இது கடிகாரம்
இயங்கவில்லை. 
ஆனால் சூரியன் வருகிறது.
மறைந்திட நிலவு வருகிறது.
கடிகாரத்துக்காக இவை வருகிறதா?
இல்லை இவற்றின் வருகைக்காக 
கடிகாரம் சுற்றுகிறதா?

நான் ஒரு முட்டாள்.
ஏன் இந்த ஆராய்ச்சி செய்கின்றேன்.
அப்படியே விஞ்ஞானி 
ஆகி விடுவேன் போல.
ஏன் ஆக முடியாதா நான்.
இப்படியே சொல்லிக் கொண்டு
காலத்தை கணித்தால் எப்படி ஆவேன்.

இருக்கை வேண்டாம்
செயற்பட்டு கொண்டே 
சிந்தித்து கொள்கிறேன்.
வயது கடந்து கொண்டிருக்கிறது.
நான் சாதிக்க வேண்டும்.

   நன்றி 
சுஜா தவம்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.