Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

பொலிஸார் இருவர் கொலை ; முன்னாள் போராளிகளிடம் விசாரணை !!

Currently online
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க.பிரபாகரன் அதன் உறுப்பினர் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், கட்சி உறுப்பினர் உட்பட முன்னாள் போராளிகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேரை மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரவு காரியாலயத்துக்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இராசநாயகம் சர்வானந்தம் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவருடன் மட்டு. தாண்டியடி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் உட்பட இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த 29ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.