Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

பொட்டம்மான் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கின்றார் !!!

Currently online
விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்

அத்துடன் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாக இருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார்.

மேலும், 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அவர் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச் செய்துள்ளதுடன் தேசிய பாதுகாப்பை புறக்கணித்து பாதுகாப்பு படையினருக்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது எனவும் கருணா தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.