Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

ருசியான இறால் பிரியாணி !!

Currently online
தேவையான பொருட்கள்
இறால் – அரை கிலோ
அரிசி – அரை கிலோ
நெய் – சிறிதளவு
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
வெங்காயம் – 3
புதினா – கால்கட்டு
கேசரி கலர் – ஒரு சிட்டிகை
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – கால் கட்டு
எண்ணெய் – 150 கிராம்
எலுமிச்சை – ஒன்று
பட்டை, ஏலக்காய், கிராம்பு – தேவையான அளவு


செய்முறை

முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிரம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

பின்னர் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லி, புதினா, தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேக விடவும்.

தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை  போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து வேகவிடவும்.

இப்போது அரிசியை முக்கால் பாகம் வேகவிட்டு அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள இறால் கலவையில் கொட்டி தம்மில் விடவும்.

தம் போடுவதற்கென்றே உள்ள  தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் விடவும்.

சிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவி போல ஊற்றி நெய் ஊற்றி மறுபடியும் மூடி  போட்டு தம்மில் விடவும்.

5 நிமிடம் கழித்து திறக்கவும்.

ருசியான இறால் பிரியாணி தயார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.