Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை நித்யா மேனன் !!!

Currently online
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பா் 5ம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார். 

அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  

இந் நிலையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படத்தை எடுக்க இருப்பதாக பெண் இயக்குனர் ஏ.பிரியதர்ஷினி கூறியிருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். 

இந் நிலையில், அவரது கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. 

இந்த போஸ்டரில் இடம்பெற்றிருப்பது ஜெயலலிதாவா? இல்லை நித்யா மேனனா என்று கேட்கும் அளவிற்கு இந்த போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் டைட்டிலும் தி ஐயன் லேடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.