Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

அசிங்கமாக காணப்படும் தேமலைப் போக்க எளிய வழிமுறைகள் இதோ !!

Currently online
தேமல் மறைய இஞ்சி, சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர மறையும்

முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

ஆடு தீண்டாப் பாலை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

தொட்டாற்சுருங்கி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.

வேப்பிலைகளை அரைத்துத் தேமல் மீது தடவிவர தேமல் குறையும்

குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்

கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும்

ஆரஞ்சு தோலை தூளாக அரைத்து தினமும் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குறையும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் தேய்த்தால் தேமல் மறையும்.

மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.

துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

கீழ்காய்நெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.

வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.

குறிப்பு: தேமல் உள்ளவர்கள் சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.