Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை ; மனைவி புகார் !!

Currently online
பவர்ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமாகிவிட்டதாக அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். 

மருத்துவரான இவர் ஒரு சில படங்களை தயாரித்து நடித்துள்ளார். தற்போது நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். முழு நேர காமெடி நடிகராக சீனிவாசன் மாறிவிட்டார்.

இந் நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் தனது கணவரை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சீனிவாசன் மீது நிறைய மோசடி புகார்கள் உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட யாரேனும் சீனிவாசனை கடத்திவிட்டார்களா அல்லது அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.