Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

வழிமறித்து சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும் !!

Currently online
வட்டுக்கோட்டை பகுதியில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட குளத்தினை பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவித்ததாவது ;

யுத்த காலத்தில் துன்பப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வினை இன்பமான வாழ்வாக மாற்றுவது எமது பொறுப்பாகும். எனவே இவ்வாறே தொடர்ந்து அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அமைதியான வாழ்வு மீண்டும் மாறுமாயின், காவல் துறையை சேர்ந்தவர்களும். இராணுவத்தினரும் வீதியோரங்களில் காவல் நிலையங்களை அமைத்து வீதியில் செல்வோரை வழிமறித்து சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும். 

தமிழர்கள் இராணுவத்தினருடன் இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் நான் எனது மனதில் தோன்றுவதனை சொல்கிறேன் நாம் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம்.

யாழில் வாழும் தமிழர்கள் அன்புடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.