Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

சா/ தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிய மாணவி மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் !!

Currently online
க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில்  மாணவி உட்பட  மூவர்  படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இச் சம்பவம் யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இன்று இடம்பெற்றது.

பரீட்சை எழுதி விட்டு மாணவி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது துவிச்சக்கர வண்டியின் பின்புறமாக மோட்டார் சைக்கிள் மோதியுள்ள நிலையில் மாணவி தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்ததுடன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சுமார்-50 மீற்றர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட நிலையில் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து காயமடைந்த மூவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்னர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.