Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 01, 2018

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரு பொலிஸார் ; சிசிடிவி கமராவில் வெளியான பதிவு !!

Currently online
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் நேற்று அதிகாலை பொலிஸ் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

காவலரணிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள கடை ஒன்றில் இருந்த சிசிடிவி கமெரா பதிவுகளில் அதிகாலை 2 மணிக்கு அண்மித்த சமயத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

எனினும் அவற்றின் இழக்க தகடுகள் தெளிவாக தெரியவில்லை.

சுமார் நால்வர் கொண்ட குழுவே தாக்குதலை நடத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.

இந் நிலையில் நேற்று இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், உயிரிழந்த பொலிசாரின் உடல்கள் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டது.

சிங்கள பொலிஸார் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்து வெட்டப்பட்டும் கொல்லப்பட்டுள்ளார், இதயம் வரை கத்தி பாய்ந்துள்ளது.

தமிழ் பொலிஸார் கைகள் பின்னால் கட்டப்பட்டு நிலத்தில் முகம் குப்புற படுக்க வைத்து பின்தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

தமிழ் பொலிஸ்காரரின் கை விரல்களில் எலும்பு உடைந்துள்ளது ஆகையால் கொலை செய்ய வந்தவர்களுடன் இவர்கள் மோதியுள்ளமையும் தெரிய வந்துள்ளது

பொலிசாரிடம் இருந்த ரிவோல்வர்களையும் தாக்குதலாளிகள் அபகரித்து சென்றுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.