Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு ஜனாதிபதி தான் காரணம் !!!

Currently online
19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு இணங்க, ஜனாதிபதிக்கு பிரதமரை நியமிக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை இந் நிலையில், நேற்றைய அவரது உரைக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ;
18 ஆவது திருத்தத்தில் தான் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. இதனை இல்லாதொழிக்கத் தான் நாம் 2015 ஆம் ஆண்டில் வெற்றிப்பெற்றோம்.

அவரை ஜனாதிபதியாக நியமித்தமையை இட்டு நாம் இப்போது கவலையடைகிறோம். இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அவர் தான் காரணம்.

தற்போது ரணில் மீது ஜனாதிபதி குற்றம் சுமத்துகிறார். ஆனால், மக்களுக்கு எது உண்மை என்பது தெரியும். 

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் ஐக்கிய தேசியக் கட்சியா பாதிக்கப்பட்டுள்ளது? இல்லை. மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தான் பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளது. கொஞ்ச நாள் சென்றால் ஜே.வி.பி.க்கும் அடுத்த இடத்துக்கு இந்தக் கட்சி சென்று விடும். இதற்கெல்லாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.