Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, December 07, 2018

இன்றுடன் நிறைவு பெறுகிறது ''வாணி ராணி'' சீரியல் !!!

Currently online
வாணி ராணி சீரியல் படப்பிடிப்பு முடிவடைவதை, தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தயாரித்து, நடித்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  'சித்தி' மாபெரும் வெற்றியடைந்தது.

தற்போது சில வருடங்களாக 'வாணி ராணி' என்ற சீரியலை தயாரித்து, அதில் அக்கா - தங்கை என்ற இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் ராதிகா. தற்போது அந்தச் சீரியலும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்று (டிசம்பர் 7) 'வாணி ராணி' சீரியலின் இறுதிநாள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ”எங்களது 'வாணி ராணி' சீரியல் முடிவுக்கு வருவதால் கலவையான எண்ணோட்டங்கள் எழுகின்றன. இன்றுதான் கடைசி நாள் ஷூட். 

நீண்ட பயணம் நிறைய அனுபவம். சில மகிழ்ச்சியான தருணங்கள். சில வருத்தமான அழுத்தமான சோர்வான தருணங்கள். ஆனால், ராடானுக்காக களைப்பின்றி உழைத்த அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையும் ஊக்கமும் அளித்த சன் டிவிக்கு நன்றி என்று ராதிகா தெரிவித்துள்ளார்.

'வாணி ராணி' சீரியலைத் தொடர்ந்து 7 வேடங்களில் ராதிகா நடிக்கும் ‘சந்திரகுமாரி’ சீரியல் தயாராகி வருகிறது. இது அதே நேரத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.