Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸாருக்கு ஜனாதிபதி அஞ்சலி !!

Currently online
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த வேளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை செலுத்தினார்.

நேற்று(02) முற்பகல் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள காலி உடுகம பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி உட்பட குடும்ப உறவினர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

அன்னாரின் பூதவுடல் உடுகமவிலுள்ள குடும்ப மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மற்றைய பொலிஸ் உத்தியோகத்தரான கணேஷ் தினேஷின் இறுதிக் கிரியை கிழக்கு மாகாண ஆளுநரின் பிரசன்னத்துடனும் ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் இரங்கலுரையுடனும் பொலிஸ் மரியாதையுடனும் அவரது சொந்த ஊரான பெரியநீலாவணை பொது மயானத்தில் இடம்பெற்றது.

அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட பூதவுடலை பொது மயானத்திற்கருகில் வைத்து பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டு பூரண பொலிஸ் மரியாதையுடன் 39 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கிற்கு கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதிப் பொலிஸ் மா அதிபர் கப்பில ஜயசேக்கர அம்பாரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்ஹ அம்பாரை பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேக்கர உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பொலிஸ் மா அதிபரினதும் இரங்கலுரைகள் வாசிக்கப்பட்டன.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.