Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, December 03, 2018

சேமியா வெண் பொங்கல் செய்ய ரெடியா ??

Currently online
தேவையான பொருட்கள்

சேமியா – 2 கப்
பாசிப்பயறு – அரை கப்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
நெய் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி (நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

1 டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்து கொள்ளவும். பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள்.

வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது வறுத்த சேமியா, உப்பு, 1 டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்து சேர்த்து நன்கு வேக விடுங்கள்.

அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

பின்னர் எண்ணெய், நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள். சூப்பரான சேமியா வெண் பொங்கல் ரெடி.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.