Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, December 08, 2018

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு !!

Currently online
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

உடனடி ஜனாதிபதித் தேர்தலை  நடத்துவது பற்றி நான் தான் முடிவு செய்ய வேண்டும். அதனை செய்யும் திட்டம் என்னிடம் கிடையாது. ஏனையவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட நான் தயார் இல்லை. என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரசியலமைப்பின்படி, பதவியேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதி புதிய ஆணை கோரி, ஜனாதிபதித் தேர்தலுக்கு அறிவிப்பை வெளியிட முடியும் என்ற நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது, பதவிக்காலத்துக்குப் போட்டியிடும் திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதுபற்றி இப்போது முடிவு செய்ய முடியாது என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக நீங்கள் பார்த்தால் மணித்தியால அடிப்படையில் அரசியல் நடக்கிறது. ஊடகப் பணியாளர்களான, நீங்கள் பல செய்திகளை வைத்திருக்கிறீர்கள். கடந்த ஐந்து வாரங்களில் இது நடந்தது.

ஒரு ஆண்டு காலத்திற்குள் என்ன நடக்கும் என்று இப்போது யார் சொல்ல முடியும்? இப்போது எதையும் நாங்கள் கூற முடியாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.