Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

12ஆம் திகதி ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை பிரேரணை !!

Currently online
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றம் எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளது இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இதற்கு முன்னர், நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கை வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.