Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

அடகுப் பொருள்..........!!!!!!!! சுஜா தவம்

Currently online
வாழ்க்கையின் ஒவ்வொன்றும் 
ஏதோ ஒன்றுக்காய் 
நிர்ப்பந்தத்திலோ விரும்பியோ 
அடகு வைக்கப்பட்டு விட்டன.

தாய்ப்பாசம் உயர்கல்வி 
இலச்சிய வெறி அத்தனையும் 
ஏழை என்ற போர்வையில்
சிக்கி கொண்டதால் 
வேலை எனும் பெயரில் 
அடகு வைத்தேன்.

விருப்புணவு விருப்பாடை 
கொண்டாட்டம் குதூகலம் 
அத்தனையும் சிக்கனம் 
என்ற ஒன்றுக்குள்
அடகு வைத்தேன்.

தேவைகள் கூட 
தெரு நாயின் சோறு போல் 
கிடைத்தால் பெறும் 
கவனிப்பாரற்ற காட்டில் 
அடகு வைத்தேன்.

சில நேரம் எழும் 
பெருங்கோபம் அத்தனையும் 
பெண்ணாக பிறந்ததனால் 
பொறுமை என்பதற்குள் 
அடகு வைத்தேன்.

உறவுகளை புரிந்து 
அவர் போக்கில் சென்றிட 
என் நரம்பினை அறுத்து 
தன்மானம் அதை கூட 
அடகு வைத்தேன்.

என்னையே அடகு வைத்து
மீட்க மனிதர் இன்றி 
அந்த பெட்டிக்குள்ளேயே கதறுகிறேன்
ஏலத்திலேனும் மீட்டு விட மாட்டார்களா
இந்த சூழ்நிலை அடகுப் பொருளை?

     நன்றி 
சுஜா தவம் 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.