Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் – 500 கிராம்
சிறிய வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பழப்புளிக் கரைசல் – 1 கப்
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப்,2 ம் 3ம் பால் ஒவ்வொரு கப்

செய்முறை

ஒரு மண் சட்டியில் கழுவிய மீன் துண்டுகள், வெட்டிய சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போடவும்

பழப்புளிக் கரைசல், தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும்.

மண் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்,  அதிகம் நெருப்பும் தேவையில்லை.

குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிறந்து வரும்போது நற்சீரகம், மிளகு, உள்ளி ஆகியவற்றை இடித்துப் போடவும், (இதனால் குழம்பு நன்றாக மணக்கும்) ருசியான யாழ்ப்பாணத்து மீன் குழம்பு தயார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.