Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

பாராளுமன்றம் கலைப்பு ; மனுக்கள் மீதான இறுதிநாள் விசாரணை இன்று !!

Currently online
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, நேற்று முன்தினம் 7 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆரம்பமாகியது.   

இந் நிலையில் இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவ் விசாரணையின் இறுதிநாள் இன்றாகும்.    

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.     

எவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.