Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, December 06, 2018

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!

Currently online
இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இதில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்த மக்கள் பீதியில் உறைந்தனர். 

நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.