Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, December 05, 2018

நான் ஜனாதிபதி ஆகியிருந்தால் இவ்வாறு செயற்பட்டிருக்கமாட்டேன் ; பொன்சேகா ஆவேசம்!!

Currently online
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவில் நான் ஜனாதிபதி ஆகியிருந்தால் தற்போதைய ஜனாதிபதிபோல் செயற்பட்டிருக்கமாட்டேன் அரசமைப்பை அப்பட்டமாகமீறும் வகையில் தீர்மானங்களை எடுத்திருக்கமாட்டேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் 
ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித்தலைவர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்பெயரை விளித்து விமர்சித்துள்ளார். 

2010 ஆம் ஆண்டு பொன்சேகா ஜனாதிபதியாகியிருந்தால் இவ்வாறு கட்சித்தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்கமாட்டார் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் காலை வாரியிருக்கமாட்டேன் தேர்தலில் தோல்வியடைந்து மெதமுலனையில் ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த நபரை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தியிருக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இரவில் ஒன்றையும், காலையில் வேறொன்றையும் ஜனாதிபதி பேசிவருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர், படைத்தளபதிகள் மனநல பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். அதேபோல் இங்குள்ளவர்களுக்கும் செய்யவேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.