Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, January 22, 2019

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த இரு கப்பல்கள் ; 11 பேர் உயிரிழப்பு !!

Currently online
ரஷ்ய கடல் பகுதியில் இந்தியர்களுடன் சென்ற இரு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்

ரஷ்யா - கிரிமியா இடையேயான கெர்ச் நீரிணையில் தான்சானியக் கொடிகளுடன் நேற்று இரண்டு கப்பல்கள் சென்றன. 

கேண்டி என்ற பெயர் கொண்ட  கப்பலில்  8 இந்தியர்கள், 8 துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். தி மேஸ்ட்ரோ என்ற கப்பலில் துருக்கி, இந்தியா, லிபியா, ரஷ்யாவை சேர்ந்த 15 பேர் இருந்துள்ளனர்.

அப்போது ஒரு கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட திரவ எரிவாயு, நடுக்கடலில் டாங்கர் கப்பலான மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரஷிய மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 2 கப்பல்களிலும் சென்ற 31 பேரில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். அதில் 11 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரணமாக நடைபெற்று வருகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.