Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 11, 2019

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை ; 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து !!

Currently online
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 16 பேரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. 

பொலிஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை பொலிஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 16 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந் நிலையில், தங்கள் மீதான குண்டர் சட்டம் உரிய வரன்முறை படி பதிவு செய்யப்படவில்லை, குண்டர் தடுப்பு சட்டத்தின் படி 30 நாட்களுக்குள் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், 40 நாட்களுக்கு பிறகே தங்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என 16 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள், சி.டி. செல்வம், ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்ய காலதாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது காலதாமதமாக குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு 16 பேர் மீதான குண்டர் தடுப்பு காவல் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.