Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 05, 2019

14 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் !!

Currently online
14 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனா மாகாணம்-பீனிக்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனை குறித்த பெண் கடந்த 14 வருடங்களாக கோமா நிலையில் இருந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி அவக்கு குழந்தை பிறந்துள்ளது. 

இந்த விவகாரத்தில் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண்ணிற்கு குழந்தை பிறக்கும் வரை அந்த மருத்துவமனை ஊழியர்கள் எவருக்கும் இத்தகவல் தெரியவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த மருத்துவமனையில் பெண் நோயாளிகளின் அறைக்கு ஆண் ஊழியர்கள் கண்டிப்பாக ஒரு பெண் ஊழியருடன் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் குறித்த மருத்துவமனையில் இதுபோன்ற ஒரு செயல் நடப்பது இதுவே முதன்முறை என நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் விசாரணை நடைபெற்றுவருவதால் குறித்த விவகராம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.