Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 25, 2019

14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய கொடூரன் !!

Currently online
14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஆண் தாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

29 வயதுடைய பெண் ஒருவர், அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பெண் கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் 29-ந் திகதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. 

14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறித்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண்களும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இதில் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் தாதி நாதன் சுதர்லாந்த் (36) என்பவர் தான், கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கினார் என்பது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தெரியவந்தது. 

இதையடுத்து பீனிக்ஸ் நகர பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.