Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 30, 2019

அதிரடி சோதனையில் ரூ.15 கோடி வரி ஏய்ப்பு கண்டுப்பிடிப்பு !!!

Currently online
சென்னையில் 74 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 15 கோடி மதிப்பில் வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் குழுமம், ரேவதி குழுமம், ஜி ஸ்கொயர் குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியோருக்கு சொந்தமான 74 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

இந்த குழுமங்கள் மீது தொடர்ந்து அதிகபடியான வரி ஏய்ப்பு புகார்கள் குவிந்ததன் அடிப்படையில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. காலை 7 மணி முதல் துவங்கப்பட்ட இந்த சோதனையானது நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெற்றது. 

சுமார் 150 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் முதல் நாள் சோதனையின் முடிவில் கணக்கில் வராத 15 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பல கோடி ரூபாய் வருவாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றும் இந்த சோதனையானது தொடரும் எனவும் முழு சோதனையும் முடிந்த பிறகே எந்த அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பது குறித்து தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.