Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 07, 2019

கத்திக் குத்துக்குள்ளான சிறுமி ; 15 வயது சிறுவனுக்கு விளக்கமறியல் !!

Currently online
சிறுமி ஒருவரை கத்தியால் குத்தி படுகாயங்களுக்குள்ளாக்கிய சிறுவன் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டு  காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவை – எகடகொட பகுதியை சேர்ந்த சிறுமியும் சிறுவனும் கடந்த 4 ஆம் திகதி விளையாடுவதற்காக அருகில் இருந்த வனப்பகுதியொன்றுக்கு சென்ற போதே கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

11 வயதுடைய சிறுமிக்கும், 15 வயதுடைய சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு அதிகரித்து சிறுமி கூச்சலிட்டுள்ள நிலையில், சிறுவன் கத்தியால் சிறுமியின் கழுத்து மற்றும் முகத்திலும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுமி, காலி – கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

ஹிக்கடுவை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.