Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 23, 2019

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு 25 வருட கடூழிய சிறை !!

Currently online
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு வடத்திய மத்திய மாகாண நீதிமன்றம் 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது .

குறித்த உத்தரவினை  வட மத்திய மாகாண நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் பிறப்பித்துள்ளார்.

வில்பத்து வனப்பகுதில் இலங்கை இராணுவப்படையின் கஜபா ரெஜிமென்ட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 இராணுவத்தினர் மீது, துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, புலி உறுப்பினர்கள் இருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது .

சூரியகாந்தன் ஜெயச்சந்திரன் எனப்படும் உதயன் அல்லது ஐயன் மற்றும் சிவப்பிரகாசன் சிவசீலன் எனப்படும் இளையன் ஆகிய இரு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கே இவ்வாறு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் அநுராதபுரம் உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில், 5 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஒரு குற்றத்திற்கு ஐந்து வருடங்கள் என்ற அடிப்படையில் ஐந்து குற்றச்சாட்டுகளுக்கும் 5 வருடங்களில் கழிந்து செல்லும் வகையில் 25 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.