Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 12, 2019

நேபாளத்தில் தாயும் 2 குழந்தைகளும் உயிரிழந்த சோக பின்னணி !!

Currently online
மாதவிலக்கு நேரத்தில் தீட்டு எனக் கூறி தனி குடிசையில் தங்கவைக்கப்பட்ட பெண், அவரின் இரு குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேபாளத்தில் மாதவிலக்கு நேரத்தில் பெண்களை தனி குடிசையில் தங்கவைக்கும் வழக்கம் 2017-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டு, கிரிமினல் குற்றமாக்கப்பட்டுள்ள நிலையிலும் பல்வேறு கிராமங்களில் இந்த வழக்கம் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் வீட்டுக்குள் செல்ல அனுமதி கிடையாது. சவுபாதி என்று அழைக்கப்படும் இந்த வழக்கத்தின்படி, வீட்டுக்கு வெளியே இருக்கும் சிறிய குடிசையில் 3 நாட்களும் மாதவிலக்கு நேரத்தில் பெண் தங்கி இருந்து தங்களுக்கு வேண்டிய உணவுகளைச் சமைத்துக்கொள்ள வேண்டும். யாரையும் தொடக்கூடாது, புத்தகங்கள் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் தொடுவதற்கு அனுமதியில்லை. இந்த வினோத  மூடப்பழக்கம் தடைசெய்யப்பட்ட சூழலிலும் இது தொடர்கிறது.

நேபாளத்தின் மேற்குப் பகுதியில், பஜுரா மாவட்டத்தில் உள்ள பாட் எனும் கிராமத்தைச் சேர்ந்த அம்பா போரா (வயது 35) மாதவிலக்கு நேரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தனி குடிசையில் தங்கி இருந்தார். அப்போது அவரின் இரு குழந்தைகளும் அவருடன் தங்கியுள்ளனர். தற்போது இமயமலைப் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், குடிசைக்குள் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.

குடிசையில் இருந்து புகை வெளியே செல்ல இடைவெளி இல்லாத நிலையில், மூச்சுத்திணறி தாயும் அவரது இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். 

இவர்கள் மூவரும் வீட்டைவிட்டு வெளியே வராத நிலையில், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. 

இவர்கள் மூவரும் சடலமாக நேற்று அதிகாலை மீட்கப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி உத்தப்சிங் கூறுகையில், 
“அம்பா போரா, அவரின் இரு குழந்தைகளும் மூச்சுத்திணறி இறந்துள்ளனர் என்று சந்தேகப்படுகிறோம். சவுபாதி பழக்கத்தை அரசு தடை செய்த பின்னரும் இது தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.