Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, January 25, 2019

இரத்தக் கறையுடன் வீடு திரும்பிய 2ஆம் வகுப்பு சிறுமி ; பள்ளியில் நிகழ்ந்த கொடூரம் !!

Currently online
2 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 42 வயது பள்ளித் தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடந்த 22 ஆம் திகதி  பள்ளியில் காலியாக இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் உடையில் ரத்தக் கறைகள் இருந்ததுடன், வலி தாங்க முடியாமல் அழுதுள்ளார். 

பெற்றோர் விசாரித்தபோது, தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த மிருகம் நிகழ்த்திய அத்துமீறலை சிறுமி தெரிவித்துள்ளார்.

மேலும் 4 தையல்கள் போட்ட பிறகே சிறுமிக்கு ரத்தக்கசிவு நின்றதாகக் கூறப்படுகிறது. இதன் பிறகும், சமூக விளைவுகளுக்கு அஞ்சி பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

தகவல் அறிந்த சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் அந்த பெற்றோருக்கு தைரியம் அளித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் செய்துள்ளனர். 

இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த அந்த மிருகம் கைது செய்யப்பட்டுள்ளான். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.