Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 31, 2019

ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டி ; கத்திக் குத்தில் ஒருவர் பலி !!

Currently online
ஒரு பெண்ணுக்காக 2 மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டு, கடைசியில் அது கொலையில்  முடிந்துள்ளது.

கோவை உக்கடம் அடுத்த கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் முரளீதரன். இவர் கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள, ஒரு தனியார் காலேஜில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் அதே காலேஜில் 2-ம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்திருக்கிறார். 

இந் நிலையில் பாலாஜி என்ற மாணவனும் அதே பெண்ணை காதலித்துள்ளார்.

இந்த விஷயம் ஒருத்தருக்கொருத்தர் தெரியவர, அது தகராறாக வெடித்துள்ளது. இந்த காதல் விவகாரம் தொடர்பாக ரெண்டு பேருக்கும் எப்பவுமே மோதல் வெடித்து வந்திருக்கிறது.

ஆனால் முரளீதரனுக்கு அந்த பெண் கிடைக்கவே கூடாது என்றும், அதற்காக அவரை கொலையே செய்துவிட வேண்டும் என்றும் பாலாஜி முடிவு செய்துள்ளார்.

கெம்பட்டி காலணியில் உள்ள மைதானம் அருகில் முரளீதரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற பாலாஜி, திடீரென ஒரு கத்தியை எடுத்து முரளீதரன் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் முரளீதரன் ஏராளமான இரத்தம் வெளியேறிய நிலையில் அலறி துடித்தவாறே கீழே சரிந்து விழுந்தார். இதை பார்த்ததும் பாலாஜி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் முரளீதரனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. 

தகவலறிந்த பொலிசார் முரளீதரனின் உடலை மீட்டு இதுசம்பந்தமான நடவடிக்கையில் இறங்கினர். தப்பியோடிய பாலாஜியை 2 மணி நேரத்தில் கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.