Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 02, 2019

மோதலால் ஏற்பட்ட விபரீதம் ; 3 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம் !!

Currently online
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 8 பேர் கத்தி மற்றும் வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் பெண்களாவர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் புத்தளம் தளுவ நுரைச்சோலை பகுதியில் ‘கிராமம் 80’ என்ற பகுதியில் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது. 

நுரைச்சோலை பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை புத்தளம் மற்றும் கற்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.