Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, January 30, 2019

மே 31ஆம் திகதிக்கு முன் தேர்தல் ; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு !!

Currently online
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.
அதற்கமைய அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும். ஏற்கனவே இருந்த, விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைப்படியே இந்த தேர்தல் நடைபெறும்.

வேட்புமனுக்களில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட  அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அமைச்சரவைப் பத்திரம் கலந்துரையாடப்பட்டு, முடிவு எடுக்கப்படும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 6 மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையிலும், தென், மேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்திலும், ஊவா மாகாண சபையின் பதவிக்காலம், ஒக்ரோபர் மாதமும் முடிவடையவுள்ள நிலையிலேயே ஒரே நாளில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் யோசனையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.