Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 03, 2019

ரஷ்யாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு !!

Currently online
ரஷ்யாவில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியாவின் உரால் மத்திய மாவட்டத்தில் அமைந்த மக்னிடோகோரஸ்க் நகரத்தில் 10 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் கடந்த திங்கட்கிழமை காலையில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் அதன் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து பொலிசார், ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

விபத்து நடந்த முதல் நாள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரை மீட்பதற்கான பணிகள் நடந்து வந்தன.

எனினும், ஒரு குழந்தை உள்பட 17 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதனால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து இருந்தது.

இந் நிலையில், தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் பலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்ந்தும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.