Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 05, 2019

ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழப்பு !!

Currently online
நைஜீரியாவில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக ஹெலிகொப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹெலிகொப்டரில் விமானி உள்பட 5 பேர் இருந்தனர்.

அந்த ஹெலிகொப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகொப்டரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.