Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 05, 2019

தளபதி 63 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா ??

Currently online
தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். 

தெறியில் பொலிஸ், மெர்சலில் டாக்டராக நடித்த விஜய், இப்படத்தில் விளையாட்டு வீரராக நடிக்கிறார்.

சர்காரில் தேர்தல் அரசியலை பேசிய விஜய், இந்த படத்தில் விளையாட்டு துறையில் உள்ள அரசியலை பற்றி பேசுகிறார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து 16 கால்பந்து வீராங்கனைகளும் நடிக்கின்றனர். 

இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதனால் இப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 63 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 18ம் திகதி துவங்குவதாக முதலில் தகவல் வெளியானது.

ஆனால் தற்போது படப்பிடிப்பு திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜனவரி 20ம் திகதி படத்துக்கு பூஜை போடப்படுகிறது. இதையடுத்து ஜனவரி 21ம் திகதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

இறுதி சுற்று படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் விளையாட்டு தொடர்பான படங்கள் அதிகமாக எடுக்கப்படுகின்றன. மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து சமீபத்தில் வெளிவந்த கனா படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.