Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கைது !!

Currently online
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து ஒரு தொகை பொருட்களை கொண்டுவர முற்பட்ட கொழும்பு பகுதியை சேர்ந்த தாய், தந்தை, மகன், மகனின் மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 



நேற்று (06) மாலை சென்னையில் இருந்து வருகை தந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 128 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்த குறித்த நபர்களின் பயணப் பைகளில் இருந்து சட்டவிரோமான முறையில் கொண்டு வரப்பட்ட 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஆயுர்வேத மருத்துவ பொருட்கள், வாசனை திரவியங்கள், வெளிநாட்டு சிகரட் பெக்கட்டுக்கள் 25, புகையிலை பெக்கட்டுக்கள் 30 மற்றும் விஸ்கி போத்தல்கள் 30 சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 



குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.