Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 24, 2019

யாழில் 7420 லீற்றர் எதனோல் போதைப்பொருள் மீட்பு !!!

Currently online
யாழில் பாரவூர்தி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட தடை செய்யப்பட்ட 372 எதனோல் போதைப்பொருள் கேன்கள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஒவ்வாரு கேனும் 21 லீற்றர் கொள்ளளவைக் கொண்டவை என்பதுடன் மொத்தமாக 7420 லீற்றர் எதனோல் மீட்கப்பட்டுள்ளது.

ரோந்தில் ஈடுபட்டு வருகின்ற விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸாரிடம் பாவூர்தியுடன் கைப்பற்றப்பட்ட எதனோல் போதைப் பொருளை விசேட அதிரடிப்படையினர்  இன்று ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னடுத்து வருகின்ற சுன்னாகம் பொலிஸார் இப் போதைப் பொருளையும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களையும் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.