Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 12, 2019

8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் ; இருவர் கைது !!

Currently online
8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், வைரம், போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட உயிரினங்கள் என கடத்தி வந்து சிலர் வியாபாரம் செய்கின்றனர்.

எனவே விமானம் மூலம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந் நிலையில், சென்னை விமான நிலையத்தில் தென்கொரியாவைச் சேர்ந்த இருவரின் உடைமைகளை சோதனை செய்த போது 24 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த  தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் பெறுமதி  8 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.