Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, January 10, 2019

அவுஸ்ரேலியாவிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் மர்ம பார்சல் ; பெரும் பரபரப்பு !!

Currently online
அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, கிரீஸ், இந்தோனேசியா, இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.

இந்த தூதரகங்களுக்கு நேற்று (09) மர்ம பார்சல் ஒன்று வந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் அனைத்து தூதரகங்களிலும் பொலிசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர சேவைகள் பாதுகாப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு அவர்களால் தூதரகங்களில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த மர்ம பார்சல்களை பரிசீலித்ததன் பின்னர் அவற்றில் ஆபத்தான  பொருட்கள் எதுவும் இல்லை எனக் கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக அவுஸ்ரேலிய பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.