Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 05, 2019

விசேட வகுப்புக்கள் நடாத்தி மாணவிகளிடம் பாலியல் சேட்டை செய்த அதிபர் கைது !!

Currently online
மாணவிகளிடம் பாலியல் சேஷ்டைகள் மற்றும் துன்புறுத்தல்கள் செய்து வந்த பாடசாலை அதிபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று (04) கைது செய்யப்படுள்ளார்.  

குறித்த அதிபர் க.பொ.த சாதாரண தர மாணவிகளிடம் அங்க சேஷ்டை புரிந்து வந்துள்ளதோடு பிரத்தியேக வகுப்பு என்று அழைத்து மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்

இந் நிலையில்  பொறுமை இழந்த மாணவிகள் தமது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது 

மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதுடன் அதிலும் மாணவிகளுக்கு என விசேடமாக வகுப்புக்கள் நடாத்துவதுடன் தேவாரம் பாட கூறி கண்களை மூடி பாடி காட்டவேண்டும் என்றும் அந்நேரத்தில் மாணவிகளிடம் அங்க சேஷ்டைகள் புரிந்துள்ளார் என குறித்த பாடசாலை அதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 55 வயதுடைய குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.