Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 14, 2019

சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த் ; சமூக வலைதளத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !!

Currently online
நடிகை யாஷிகா ஆனந்த் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது மஹத்துடன் ஒரு படத்திலும், யோகி பாபு நடிக்கும் 'ஜோம்பி' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியிலும் நடுவராக உள்ளார்.

இந் நிலையில் தற்போது இவர் ஒரு கையெழுத்து மூலம் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  பொழுதுபோக்கிற்காக சமீபத்தில் யாஷிகா ஆனந்த் தீம் பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார்.  அங்கு அவரை கண்டுகொண்ட பள்ளி மாணவர்கள் இவரை சூழ்ந்துகொண்டு,  ஆட்டோகிராப் வாங்கினார்கள்.

அப்போது ஒரு மாணவர் கையில் நோட்டு, பேப்பர் எதுவும் இல்லாததால் தான் வைத்திருந்த 200 ரூபாய் நோட்டை எடுத்து யாஷிகாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். 
இந்த கையெழுத்தால் தான் தற்போது தொடர் விமர்சனங்களை பெற்று வருகிறார் யாஷிகா.

சட்டப்படி ரூபாய் நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் தான் கையெழுத்திட வேண்டும்.  இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் யாஷிகா நடந்து கொண்டுள்ளார் என்றும் ரூபாய் நோட்டில் தவறுதலாக கிறுக்குவதோ எழுதுவதோ தவிர்க்கப்பட வேண்டியது மட்டும் அல்ல அது குற்றம் என்பது கூட அவருக்கு தெரியாமல் போய்விட்டதா என சமூக வலைதளத்தில் யாஷிகாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவரை வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.