Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, January 22, 2019

குப்பை கிடங்கிலிருந்து பெண்ணின் கை மற்றும் கால்கள் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் !!

Currently online
குப்பை கிடங்கில் பெண் ஒருவரின் இரண்டு கால்கள் மற்றும் கை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் 100 அடி சாலையில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கு அமைந்துள்ளது.

இங்கு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினசரி ஒரு நாளைக்கு 300  குப்பை வண்டிகள் வந்து  குப்பைகளை கொட்டி செல்கின்றன. 

இந் நிலையில் வள்ளுவர் கோட்டத்திலிருந்து  வந்த ஒரு லாரியில் இருந்த குப்பைகளை ஊழியர்கள் தரம் பிரித்தெடுக்கும் போது  இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து பள்ளிகரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் தலைமையில் பொலிசார் பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் இருக்கிறதா என்று விசாரணை நடத்தினர். 

மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மீட்கப்பட்ட கை மற்றும் கால்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.