Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 26, 2019

சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள்

எலும்புகள் இல்லாத சிக்கன் - 1 கிலோ
மிளகாய் தூள் - 8 - 10 மேசைக்கரண்டி
உப்பு - 7 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/2 கப்
கடுகுப் பொடி - 2 மேசைக் கரண்டி
சீரகம் மற்றும் வெந்தையப் பொடி - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா பொடி - 1/2 மேசைக்கரண்டி
முழு பூண்டு  - 1
கறிவேப்பிலை - 5 இலைகள்
சீரகம் - 2 மேசைக் கரண்டி
கடுகு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் - 1/2 மேசைக்கரண்டி
செய்முறை

சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு பொரித்துக் கொள்ளவும். சிக்கன் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். சிக்கனைப் பொரித்ததும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் 4 - 5 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்கு காய விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்து வரும் வரைக் காத்திருக்கவும். அடுத்ததாக உறித்த முழு பூண்டு பற்களை அதில் போட்டு வதக்கவும். அடுத்ததாக கறிவேப்பிலை சேர்க்கவும்.

பின் இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கியதும் மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும்.

அடுத்ததாக சிறிய பாத்திரத்தில் மிளகாய்த் தூள், உப்பு, கடுகுப் பொடி, சீரகம் மற்றும் வெந்தயப் பொடி , கரம் மசாலா பொடி, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்குக் கிளறவும். தற்போது அந்தக் கலவையை எண்ணெய் கடாயில் போட்டு வதக்கவும். வதக்கும் போது அடுப்பை சிறு தீயில் வையுங்கள்.

நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் பொரித்து வைத்துள்ள சிக்கன் வறுவலை அதில் சேர்த்து கலவை சிக்கனிற்குள் இறங்குமாறு வதக்கவும் நாவூறும் சிக்கன் ஊறுகாய் ரெடி. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.