Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 05, 2019

கணவன் அதிகாரம்.........!!!!!!!! தோழி கவிதாயினி

Currently online
நீ நீயே தான்
உனக்கு நிகர் இவ்வுலகில் எவருமில்லை...!

உரிமையில்லாத உறவாகி வந்து
உயிரில் கலந்த அர்த்தநாரி நீ...!
பாசம் என்ற பண்பை தந்து - எனை 
பாதுகாக்க வந்த புருசன் நீ...!

இடம்மாறி கலந்த இதயத்தில் இணைந்து
இணையாகிப் போன இனியன் நீ...

என் உயிர்த் தோழன் மட்டுமல்ல ...
உயிரில் கலந்த சினேகனும் நீ..!

அன்னையின் மறு பிறவியை
இந்த ஜென்மத்திலேயே காட்டிய
தாயுமானவன் நீ..!

தந்தையின் கண்டிப்பை
தனதாக்கி கொண்ட இன்னொரு 
தகப்பனும் நீ...!

உன் அன்பில் கடன்பட்ட
கடன்காரி நான்...!

வட்டியோடு காதலை வசூலிக்கும்
காதல் வட்டிக்காரன் நீ...!

அள்ளி அளவெடுக்க முடியாத
ஆகாய அளவு உன் அன்பு ..!

கடையேறு வள்ளலாலும் 
கொடை தர இயலாத
கர்ணனின் ஈகையாய் உன் பரிவு...!

கதறலுக்கு முடிவுரை தரும்
காலனாய் உன் அரவணைப்பு...!

கனிவிற்கு முன்னுரை வரையும்
கணவனாய் உன் அணைப்பு...!

சொற்களில் உன் நேசத்தை 
சொட்டும் போதெல்லாம்
சொர்க்கத்தைக் காண்கிறேன் நான் ..!

செயலில் உன் பாசத்தை
செயற்படுத்தும் போதெல்லாம்
செயலிழந்து போகிறேன் நான் ...!

ஏழேழு பிறவியிலும் 
நீயே என் கணவனாக வேண்டும் ...!

ஆயுளிற்கும் உன் அன்பினிலே - நான் 
திளைத்து மகிழ வேண்டும் ..!

              நன்றி 
தோழி கவிதாயினி

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.