Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, January 14, 2019

வா என் மகனே...........!!!!!! கூடலூர் சிந்துஷன்

Currently online
இன்றோ நாளையோ
இப்போதோ எப்போதோ
என்றாவது ஒரு நாள் 
என்னை தேடி வருவாயா!

யார் யாரோ வருகிறார்கள்
ஏதேதோ கதைக்கிறார்கள்
புரியாத பாசையிலே
அறியாமல் சொல்கிறார்கள்!

கர்ப்பத்தில் சுமந்து உன்னை 
காணாமல் தவிக்கின்றேன் 
கனவுகளை சுமப்பதனால்
காட்சிப்பொருள் ஆகின்றேன்!

உணர்வுகளின் கடைசி இழையில்
ஊசலாடும் என் உயிர்
உத்தமனே உன்னை தேடி
உருகும் மெழுகானதே!

கடல் கடந்து கரை தழுவும் 
கந்தகக்காற்றையும்
உலகம் சுற்றும் பகலவனையும்
தினம் கேட்கின்றேன்
உன் முகத்தை எங்காவது பார்த்ததுண்டா!

கந்தக புகையினால் கருகிய மேட்டிலும்
மண்ணில் புதைந்துருகும்
உறவுகளின் மீதியிலும்
ஐயா உன் நினைவு அப்படியே இருக்கிறது!

வன்னிக்காட்டின் பச்சை மரங்களிலும்
பசுமையாக இருக்கிறது உன் ஞாபகங்கள் 
நீ உறங்காத இரவுகள் உண்ணாத நாட்கள் 
என்மடியில் படுத்துறங்கிய பொழுதுகள்!

அனலாக பிறந்தவனே
வீரத்தின் விளைநிலமே
ஈழத்தாய் என்னையே
சிறை மீட்க வருவாயா!!!!!

           நன்றி 
கூடலூர் சிந்துஷன்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.