Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, January 29, 2019

காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு !!

Currently online
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி நாளை தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், விளங்கோடு, பதுக்கடை பகுதியில் உள்ள மதுக்கடையை மூட உத்தரவிடக்கோரி ரத்தீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டு அடுத்த மாதம் 18 ஆம் திகதிக்கு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

அப்போது, நீதிபதிகள் தாங்களாகவே முன்வந்து, நாளை மகாத்மா காந்தி நினைவுநாள் என்பதால், தேசத் தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.