Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, January 12, 2019

பெற்ற தாயை கொன்று விட்டு நாடகமாடிய மகள் ; விசாரணையில் அதிரவைக்கும் காரணம் !!

Currently online
பெற்ற தாயை மகளே தனது கள்ளக்காதலனுடன் தீவைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தாம்பரம் சானிடோரியத்தைச்  சேர்ந்தவர் பூபதி (வயது 60). இவரின் மகள் நந்தினி (வயது 26) அவரின் கணவர் கண்ணனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 7 திகதி வீட்டு வேலை செய்துவிட்டு வீட்டிற்கு  வந்த தாய் பூபதி  பகல் நேரத்தில் அசதி காரணமாக வீட்டில் படுத்து உறங்கியபோது தானாக தீப்பற்றி எரிந்ததாக நந்தினி கதறி அழுதார்.

பேச்சு முச்சற்ற நிலையில் இருந்த பூபதி தீவிர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று மாலை உயிரிழந்தார்,

இது குறித்து குரோம்பேட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர. 

பூபதி உடலில் தானாக தீப்பற்ற என்ன காரணம்? நந்தினியின் செயல்பாட்டில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கிடுகிபிடி விசாரணை நடத்தினர்.

திருநீர்மலையை சேர்ந்த முருகன்(வயது-46) என்பவருக்கும் நந்தினிக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது இதனை அறிந்த தாய் பூபதி மகளை கண்டித்ததாகவும் அதனால் தாய் பூபதியை முருகனுடன் சேர்ந்து கொலை செய்ய நந்தினி திட்டமிட்ட நிலையில்  அசதியில் படுத்து  உறங்கிய தாய் பூபதி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த பூபதியை மீட்பதுபோல பொய்யாக கண்ணீர் விட்டுகலங்கி நாடகமாடிய நந்தினி செயல் அன்று யாருக்கும் தெரியவில்லை. 

சிகிச்சை பலனின்றி தாய் பூபதி இறந்த நிலையில், குரோம்பேட்டை பொலிசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் நந்தினியையும் அவரது கள்ளக்காதலன் முருகனையும் பொலிசார் நேற்று கைது செய்தனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.